Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸின் முக்கிய படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்!

பாகுபலி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் ஈர்த்தவர் பிரபாஸ். இன்னும் குழந்தைகள் கூட இவர் தான் பாகுபலி என்றே சொல்லும். அப்படியாக பலரின் மனதிலும் பதிந்துவிட்டது.

இவ்வளவு ஏன் படத்தில் அவர் எப்படியிருந்தாரோ அப்படியே அச்சு விலகாத மெழுகு சிலையாக உருவாக்கி பிரபல் அருங்காட்சியகத்தில் நிற்க வைத்துவிட்டார்கள்.

தற்போது அவர் சுஜித் இயக்கும் சஹோ படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் படமான இது ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் சண்டைக்காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் ஹிந்தி தியேட்டர் ரிலீஸ் உரிமையையும், டிஜிட்டல் உரிமையையும் பிரபல நிறுவனமான T series அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம்.

Comments