Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாதியில் நின்றது தமன்னாவின் முக்கிய படம் - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர். அவர் பாலிவுட்டில் ஹிட் ஆன குயின் பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஷூட்டிங் கூட நடந்தது.

ஆனால் தற்போது அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக்கை இயக்கிவந்த நீலகண்ட ரெட்டி படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியது தான் படம் நின்றதற்கு காரணம்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கும் ரமேஷ் அரவிந்த் அதை முடித்துவிட்டு, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பணியாற்ற துவங்குவார் என தற்போது கூறப்படுகிறது.

தமிழில் காஜல் அகர்வால் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.