Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பின்னால் இருக்கும் உண்மை! முக்கிய தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் வெளிவருகிறது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை மே 9 ல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவை ட்விட்டர், பேஸ்புக், யூடுயூப் என சமூகவலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்கிறார்களாம். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் இசைகுழுவுடன் மேடையிலேயே இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளாராம். மேலும் ரஜினி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் சுற்றி வந்தது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி சீட்டையும் அனுப்பி வைத்துள்ளார்களாம்.

இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வரவிருக்கிறார்களாம். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments