Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆட்டோ டிரைவராக மாறிய பிரேமம் மலர் டீச்சர்!

பிரேமம் படத்தின் ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள் தானே. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா என பலர் நடித்திருந்தார்கள். இதில் சாய்ப்பல்லவி தற்போது தமிழ் பட ஹீரோயினாகிவிட்டார்.

அவரின் நடிப்பில் அண்மையில் தியா(கரு) படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் தற்போது தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஸ்டிரைக்கிற்கு பிறகு ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

அண்மையில் சாய்பல்லவியின் பிறந்த நாளை அங்கேயே வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். இதற்காக ஆட்டோ ஓட்ட பயிற்சிகள் எடுத்துகொண்டாராம்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஆட்டோ ஓட்டுவது போல இருந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்ப்பட்டிருக்கிறார்கள்.

Comments