Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையிலே கண்ணீர் விட்டு அழுத ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின்!

இசையமைப்பாளராக அதிக ஹிட்ஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் முழுமையாக இறங்கிவிட்டார். அவரின் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் செம.

வள்ளிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வியே இசையமைத்து நடித்திருக்கிறார். இப்படத்தில் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய ஹீரோயின் அர்த்தனா கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இது படக்குழுவிற்கும் மிக அதிர்ச்சியாக இருந்தது. அப்போது இயக்குனரும் அவரின் அழுகைக்கு நாங்கள் காரணமில்லை என கூறினார்.

பின் பேசிய அர்த்தனா நான் அழுததே வேறு விசயத்திற்காக தான். நான் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். இப்படத்தில் நடிக்கும் போது படக்குழுவினரும் தயாரிப்பாளரும் ஒரு படத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன். அதை நினைக்கையில் இப்படம் நன்றாக ஓட வேண்டும் என அழுகை வந்துவிட்டது.

மேலும் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.