Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு! முதலமைச்சர் வாழ்த்து

கீர்த்தி சுரேஷ் மீது பல தயாரிப்பாளர்களின் பார்வையும் திரும்பியுள்ளது. இதற்கு காரணம் அண்மையில் வெளியான மகாநதி படத்தில் அவரின் சிறந்த நடிப்பு தான். இப்படத்தில் மறைந்த பிரபல நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார்.

அந்த பழம் பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு படமான இது பெரும் வெற்றி பெற்றது. பலரும் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் என இதில் பணியாற்றிய பலரையும் வாழ்த்தினார்கள்.

தற்போது ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மகாநதி படக்குழுவை வாழ்த்தியுள்ளார். மேலும் படக்குழு அமராவதி வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ 50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்கள்.