Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62 படத்தில் அதை மிகவும் எதிர்பார்க்கிறேன்! பிரபல நடிகரின் நம்பிக்கை

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாவும் இருக்கிறார்.

அண்மையில் பேட்டியளித்த யோகி பாபு முன்பே ஜில்லா, தெறி படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தேன். ஆனால் காட்சிகளை நீக்கிவிட்டர்கள். மெர்சல் படத்திலும் அப்படியே நீக்கி விடுவார்கள் என நினைத்தேன்.

நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். ஆனால் என்னுடைய காட்சிகளும் வந்தது. தற்போது விஜய் 62 படத்திலும் என்னுடைய காட்சிகள் வரும். கட்டாக வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

ஏனெனில் விஜய் சாருடன் சூப்பர் கேரக்டரில் நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.