Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் இணைந்த முக்கிய பட நடிகை!

அஜித் சிவா மீண்டும் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார். விசுவாசம் என பெயரிப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

ஹைதராபாத்தில் இதற்கான ஷூட்டிங்ஸ் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.

இமான் முதன் முதலாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் இந்த விசுவாசம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.