Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரின் படவாய்ப்பை வேண்டாம் என ஒதுக்கிய கீர்த்தி குடும்பம்!

கீர்த்தி சுரேஷ்க்கு தற்போது வரவேற்புகள் பெருகிவிட்டன. அண்மையில் வந்த மகாநதி படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதுவரை கிடைக்காத வரவேற்பு அவருக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

அவரின் அம்மா மேனகாவும் நடிகை. அப்பா மலையாள சினிமா தயாரிப்பாளர். இப்போது கீர்த்தியின் பாட்டின் சரோஜாவும் நடிக்க தொடங்கவிட்டார். அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.

இப்படத்தை இயக்குனர் பாலா எடுக்கிறார். ஹீரோவின் பாட்டியாக அவருக்கு வந்த வாய்ப்பை கீர்த்தியின் அம்மா வேண்டாம் என கூறிவிட்டார். சரோஜாவுக்கு பதிலாக பழம்பெரும் நடிகை காஞ்சனா நடித்துள்ளார்.

காரணம் முக்கிய கேரக்டரான பாட்டி, கதையின் கடைசியில் இறந்துவிடுவாராம். மேலும் கீர்த்தியின் பாட்டி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்து அவதிப்பட்டாராம்.

மேலும் அவர் அப்போது பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்த மேனகாவால் தாங்க முடியவில்லையாம். என் அம்மாவுக்கும் மரண நிலையில் நினைத்து பார்க்க மனமில்லை.

இதனால் சரோஜாவுக்கு வந்த வாய்ப்பை மேனகா தவிர்த்துவிட்டாராம்.