Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுக்கு பொது இடத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு!

நடிகை ஓவியா கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் பெயரில் பெரும் ரசிகர்கள் அமைப்பே உருவானது. நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனங்களில் அவர் இடம் பெற்றார்.

தற்போது ஓவியா படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் களவாணி 2 படத்தில் மீண்டும் இணைந்தார். இதில் அவருக்கு ஜோடியாக விமல் நடித்து வருகிறார். இப்படத்தில் ஓவியாவுக்கு மிக முக்கியமான வேடமாம்.

இதன் படப்பிடிப்புகள் தஞ்சாவூரில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஓவியா அங்கே தங்கியுள்ளாராம். மேலும் களவாணி படம் எடுக்கப்பட்ட இடத்திலேயே இந்த புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.

படப்பிடிப்பு பகுதிகளில் ஓவியாவை பார்த்த மக்கள் நேரடியாக வந்து வாழ்த்தினார்களாம். மேலும் ஓவியாவுடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்து சென்றார்களாம்.