Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் கொண்டாட்டம் மீண்டும் ஆரம்பம்!

அஜித் தற்போது விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார். அண்மையில் ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நிறைய வெளியாகின. திருவிழா காட்சி பாடலுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பெரியளவில் செட் போடப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் எடுத்து முடிக்கப்பட்டது. பின் அஜித்தும் சென்னை திரும்பினார்.

இப்படத்தில் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, நயன்தாரா என பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 25 ம் தேதி அதே இடத்தில் தொடங்குகிறதாம்.