Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோலி சோடா 2 படத்திற்காக சூர்யா எடுக்கும் முயற்சி

விஜய் நடித்த பிரியமுடன், நெஞ்சினிலே படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் விஜய் மில்டன். மேலும் கோலிசோடா படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிரூபித்தார்.

இப்படம் மக்களிடமும், சிறுவர்கள், சிறுமிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கோலிசோடா 2 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, ரேகா, ரோஹினி, வினோத் ஜோஸ், ரக்சிதா என பலர் நடிக்க அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு புரமோஷன் வேலைகளை துவக்கியுள்ளார். இதற்காக GST வண்டியை சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி, திருச்சி, சேலம் என பல நகரங்களுக்கு செல்கிறது.

இதை சூர்யா நாளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.