Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பியார் பிரேமா காதல் - ட்ரெண்டாகும் யுவனின் டோப் பாடல்

யுவன் தயாரித்து இசைமைத்துள்ள பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகவிரைவில் வெளிவரவுள்ளது. ஏற்கனவே ஹை ஆன் லவ் பாடல் 10 லட்ச ஹிட்ஸை தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்திலிருந்து டோப் சிங்கள் ட்ராக் வெளிவந்துள்ளது. இதுவரை திரையில் கண்டிராத ரஷ்யா நாட்டில் Azerbaijan என்னும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது, காதலின் வலியை சொல்லும் இப்பாடலின் வரிகள், கண்ணை கவரும் ஒளிப்பதிவு, யுவனின் உருகும் இசை என பாடல் இன்றைய ட்ரெண்டில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஹரிஷ் கல்யாண் , ரைசா நடித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ளார். யுவனின் முதல் தயாரிப்பு என்பது கூடுதல் தகவல் .