Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பதிலுக்காக காத்திருக்கிறேன்: முன்னணி இயக்குனர்

நடிகர் விஜய்யுடன் பணியாற்றவேண்டும் என எந்த இயக்குனருக்கு தான் ஆசை இருக்காது.

தற்போது முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் விஜய்யுடன் பணியாற்ற வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

"விஜய் சாரோட படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஒருமுறை நான் அவரிடம் கதை சொன்னேன். 'இது வேண்டாம்.. வேற மாதிரி ஏதாவது படம் பண்ணுவோம்' என அவர் கூறினார். அதன் பிறகு மூன்று முறை சந்தித்துள்ளோம். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்குறேன். அப்படி கிடைத்தால் அது லவ் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும்" என கவுதம் மேனன் கூறியுள்ளார்.