Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த பிரபல காமெடியன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வசூல் ஈட்டி வருகிறது. அடுத்து 2.0 படமும் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து ரஜினி கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. கடந்த வாரம் ஷூட்டிங் துவங்கிய நிலையில் தற்போது பிரபல காமெடியன் முனீஷ்காந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

டேராடூன் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் அடுத்த 40 நாட்களுக்கு தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவுள்ளது. இந்த படத்தில் அரசியல் இருக்காது என அவர் முன்பே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.