Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ராக்கர்ஸுக்கு உதவிய பிரபல திரையரங்கம் மீது தயாரிப்பாளர் சங்கம் எடுத்த நடவடிக்கை

தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பதவியேற்றபிறகு நான் தமிழ்ராக்கர்ஸ் மற்றும் திருட்டு டிவிடிகளை ஒழிப்பேன் என கூறிவந்தார். அதற்காக சங்கம் எடுத்த முயற்சிகளில் தற்போதுவரை முழு வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு குப்பை கதை என்ற படம் வெளியான மறுநாளே தமிழ்ராக்கர்ஸ், திருட்டு டிவிடிகள் வெளியானது. அது பற்றி விசாரித்ததில் மயிலாடுதுறை கோமதி திரையரங்கம் மூலம் திருட்டு விசிடி செய்து இணையத்தில் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது திருட்டு வி.சி.டி. தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்துள்ளது. மேலும் அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.