Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக போடப்பட்ட அதிரடி உத்தரவு! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நிகழ்வு

சூப்பர் ஸ்டார் ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். ஏற்கனவே அவரின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால் அண்மையில் இணையதளத்தில் சிலர் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின் அது முடக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் டார்ஜிலிங்கில் அண்மையில் தொடங்கியது. விசயம் தெரிந்ததும் பல ரசிகர்கள் அங்கே கூடிவிட்டார்களாம்.

இதனால் படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற முடிவுசெய்துவிட்டார்களாம். அத்துடன் படத்தின் ரஜினியின் கெட்டப் ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதற்காக ஷூட்டிங் தளத்தில் ரசிகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படப்பிடிப்பில் இருப்பவர்கள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலிஸ் பாதுகாப்புடன், தனியார் பாதுகாவலர்களும் போடப்பட்டுள்ளார்களாம். அடையாள அட்டை சரிபார்த்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்களாம்.