Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் அந்த ரஜினியின் மாஸான காட்சிக்கு பின்னால் இருக்கும் முக்கிய விசயம்!

ரஜினி நடித்த காலா படம் அண்மையில் வெளியானது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்புகளும் கிடைத்து வந்தது. இப்படத்தின் ரஜினி எண்ட்ரியாகும் காட்சி மாஸாக இருந்தது.

அதில் அவருக்கு அறிமுகம் கொடுத்து ஸ்கீரினில் வரவேற்பவர் குட்டி பையன் ராஜ் குமார். இவருக்கு வயது 13 தானாம். வீட்டில் இருந்தே 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டில் இவரை நடிப்பில் கொண்டு வரவேண்டும் என்பதால் நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்த்து விட்டார்களாம். காலா படத்தின் டையலாக் பேசும் போது டேய் ரஜினி என கூப்பிட்டாராம்.

தவறாக பேசினாலும் ரஜினி அதை பொறுமையாக கவனித்துகொண்டு சிரித்தாராம். பின் லெனின் கேரக்டர் வீட்டை விட்டு வெளியேறும் போது ரஜினியுடன் ஜீப் அருகே நிற்பார் இந்த குட்டிபையன்.

சார் நான் சும்மா நிற்பதற்கு பதில் ரஜினி சாருக்கு டூல்ஸ் எடுத்து கொடுத்து உதவி செய்வது போல நடிக்கட்டுமா என ராஜ்குமார் ஆலோசனை கேட்க ரஜினியும், ரஞ்சித்தும் ஓகே சொல்லிவிட்டார்களாம்.

மேலும் ஆடிசனுக்கு வரும் போது இந்த பையன் விஐபி படத்தில் வரும் நீளமான வசனத்தை பேச உடனே செலக்ட் செய்துவிட்டார்களாம். அதோடு இவர் தனுஷின் தீவிர ரசிகராம்.

பின் படத்தை தனுஷ் தான் தயாரிக்கிறார் என தெரிந்ததும் ராஜ்குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாம்.

அந்த குட்டி பையனுக்கு இன்று பிறந்தநளாம். வாழ்த்துக்கள் தம்பி..