Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தை விட மெர்சல் தான் பெஸ்ட்! பிரபலத்தின் கருத்தால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு

பெரிய அளவில் அரசியல் எதிர்ப்பை சந்தித்த படம் மெர்சல். விஜய் நடித்திருந்த இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி சில வசனங்கள் இருந்ததால் தான் இந்த எதிர்ப்பு. சமீபத்தில் வெளியான காலா படத்திலும் அரசியல் கருத்துக்கள் இருந்தாலும் அரசியல் எதிர்ப்பு எதுவும் எழவில்லை.

இந்நிலையில் விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் "காலாவை விட மெர்சல் படம் தான் பெஸ்ட்" என கூறியுள்ளார். "தமிழ்நாட்டில் சமூக அக்கறையுடன் படங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது" எனவும் அவர் கூறியுள்ளார்.

எஸ்ஏசி-யின் கருத்து தற்போது ரஜினி ரசிகர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.