Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற போராளி சேக்குவாரா பற்றிய படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி மற்றும் ரகுல் பீரித்சிங் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்.

இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதே நாளில் தான் விஜய்யின் சர்கார் படமும் திரைக்கு வருகிறது.

இப்படத்தை முடித்த கையோடு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்தின் நடிகர்கள் தேர்வு தற்போது முடித்துள்ளது. அதன்படி சூர்யாவிற்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகை சாயீஷா தேர்வு செய்யப்பட்டதாக படக்குழுவினர் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் ஏற்கனவே வனமகன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது. இதனால் தான் இவர் முன்னணி நடிக்கரான சூர்யாவின் படத்தில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமுத்திரகனி மற்றும் அல்லுஷிரிஷ் போன்றோரும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.