Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டிக் டிக் படத்தை கலாய்த்த தமிழ்படம் 2 போஸ்டர்

சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான டிக் டிக் டிக் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ரசிகர்கள் பலரும் கிராபிக்ஸ் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரபலங்கள் பலரையும் கலாய்த்து புகைப்படம் வெளியிட்டுவரும் தமிழ்படம் 2 படக்குழு தற்போது இந்த டிக் டிக் டிக் விட்டுவைக்கவில்லை. படத்தை விமர்சிப்பது போல ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதில் டிக் டிக் டிக் விண்வெளியில் நகர்வதை போல, சிவா மற்றும் சதிஷ், ஹீரோயினுடன் சேர்ந்து விண்வெளியில் ரம்மி விளையாடுவது போல காட்டியுள்ளனர். மேலும் இந்த புகைப்படம் எடுக்க 4 மணி நேரமாக ஹீரோயின் தலைமுடியை சரிசெய்யவேண்டியிருந்தது என இயக்குனர் ட்விட்டரில் காமெடி செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.