Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை எதிர்த்தவர்கள் ரஜினியையும் எதிர்த்தால் இது தான் நடக்கும்! அதிரடி அறிவிப்பு

விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் போஸ்டர் அவரின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆனது. ரசிகர்களை பொறுத்தவரை இது கொண்டாட்டமான விசயம் தான்.

ஆனால் இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு சமீபத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலா படத்தில் ரஜினி ஒரு காட்சியில் கள் குடிப்பது போலவும், அதை பற்றி வசனம் பேசுவது போலவும் இருந்தது. இதில் கள் போதைப்பொருள் கிடையாது. அது உணவின் ஒரு பகுதி.

அதை இறக்குவதும், குடிப்பதும் அரசியல் அமைப்பு கொடுத்த சட்டம். அது மக்களுக்கான உணவு தேடும் உரிமை. கள் விடுதலை கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இந்நிலையில் விஜய்யின் சர்க்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது. இதை கண்டித்தவர்கள், ரஜினியின் கள் காட்சியையும் எதிர்த்தால் நாங்கள் வாதத்தின் மூலம் அதை முறியடிப்போம் என கூறியுள்ளனர்.