Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இயக்குனரின் சூர்யா படத்தில் விஜய் பட ஸ்பெஷல்!

சூர்யா அண்மையில் தான் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துவிட்டார்.

இதன் ஷூட்டிங் நேற்று லண்டனில் தொடங்கியது. அதே வேளையில் NGK படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் சூழ்ந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக ஜகபதி பாபு இணைந்துள்ளார்.

இவர் பைரவா படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர். அடுத்த மாத இறுதியில் இவர் செல்வராகவன் படத்தின் இணைகிறாராம். இரண்டு வாரங்கள் அவருக்கு கால்ஷிட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் ஷூட்டிங்கை செல்வராகவன் வரும் ஆகஸ்ட் மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். யுவன் இசையமைக்கும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

ஏற்கனவே விஜய் நடிக்கும் சர்கார் படம் இதே நாளில் தான் வெளிவரவுள்ளது.