Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டன் ரசிகர்கள் நடிகர் சூர்யாவை நேரில் சந்திக்க வாய்ப்பு - முழு விவரம்

நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பூஜை சமீபத்தில் தான் லண்டனில் நடந்தது.

நடிகை சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால், ஹிந்தி நடிகர் போமன் இரானி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் அகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா37 படக்குழுவை நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ள ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 மற்றும் 2ம் தேதி Gibson Hall, 13 Bishopgate London EC2N 3BA என்னும் இடத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சூர்யா மற்றும் படக்குழுவினரை ரசிகர்கள் நேரில் சந்திக்கலாம்.

அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.