Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் போஸ்டர் சர்ச்சை! நாங்கள் என்ன முட்டாளா? விஜய்க்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அதிரடி

தற்போது தளபதி விஜய்யின் சர்கார் படம் தயாரிப்பில் இருக்கும் போதே பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்று உள்ள புகைப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று அரசிடம் இருந்து வந்த நோட்டீஸ் காரணமாக போஸ்டர் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி மூடர்கூடம் பட புகழ் இயக்குனர் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார். "ஒரு மாஸ் ஹீரோவை பார்த்து மட்டும் புகைபிடிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாளா? இதெல்லாம் சினிமா வருவதற்கு முன்பே வந்தவை. ஒரு ஸ்டாரை மட்டும் ஏன் டார்கெட் செய்யவேண்டும்" என விஜய்க்கு ஆதரவாக நவீன் பேசியுள்ளார்.