Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படக்குழுவிடம் இதை முக்கியமாக எதிர்பார்க்கும் ரசிகர்கள்! விசயம் இதுதானாம்

அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

இப்படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, விவேக் என 4 காமெடியன்கள் உள்ளனர். விவேகம் படத்தின் மீதான எதிர்மறை விமர்சங்களால் ரசிகர்கள் விசுவாசம் படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சிவாவும் ரசிகர்களுக்கு பிடித்தது போல இருக்கும் என கூறிவிட்டார்.

இந்நிலையில் ரசிகர்கள் வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி விசவாசம் படத்தின் ஸ்பெஷலாக ஏதாவது வெளியிட வேண்டும் என படக்குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

காரணம் அஜித்தின் 26 ம் வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக தானாம். ஆனால் அஜித் படங்கள் பற்றிய தகவல்கள் சமீபகாலமாகவே எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துவதோடு இணையதளங்களிலும் ட்ரெண்டாகி விடுகிறது.

ஏற்கனவே இம்மாத இறுதியில் படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.