Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சூப்பர் சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது நயன்தாரா தான். இவரது கையில் தற்போது 10 படங்கள் இருக்கிறதாம். கதைகளை தேர்வு செய்வதில் அவர் அதிக கவனம் செலுத்துகிறார்.

இதில் அவர் கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இதன் ட்ரைலர் நேற்று வெளியானது. ஏற்கனவே இப்படத்தின் கல்யாண வயசு பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அனிருத் பாடிய இப்பாடலில் காமெடி நடிகர் யோகி பாபு நயன்தாராவை காதலிப்பது போல இருந்தது. ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே 1.5 மில்லியன் பார்வைகளை பெற்றது.

தற்போது 2.5 மில்லியன் பார்வைகளை பெற்று Youtube ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.