Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!

அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கி வரும் இப்படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இதில் தம்பி ராமையா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் என பல காமெடியன்கள் நடிக்கிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். அண்மையில் பாடல் விசயமாக ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்திற்கு கூட நேரில் சென்று அஜித்தை சந்தித்தார். பாடல் ஷூட்டிங்கையும் பார்வையிட்டார்.

இமான் தற்போது முன்னணி இசையமைப்பாளராக அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போல நடிகராகிவிடுவார் என சொல்லப்பட்டு வந்தது.

இதுகுறித்து பதில் அளித்துள்ள இமான் உடல் எடை அதிகமாக இருப்பதால் தான் குறைத்தேன். ஆரோக்கியத்திற்காக மட்டுமே. நடிப்பதற்காக அல்ல. நடிக்கும் எண்ணம் என்னிடம் சிறிதளவு கூட இல்லை. இசையமைப்பதில் பிசியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.