Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா

வெங்கட் பிரபு தற்போது பார்ட்டி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால் அப்படத்தை திரைக்கு கொண்டுவர படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தாமதித்ததால் படத்தை திரும்ப பெற்று தானே வெளியிடும் வேலையில் இறங்கினார். ஆனால் இன்னும் படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு என்ற பெயரில் புதிய படத்தை இயக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். சிம்புவும் வெங்கட் பிரபுவும் முதல்முறையாக இணையும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

வெங்கட் பிரபுவுக்கு எப்போதுமே ஒரு பாணியுள்ளது. அதாவது தான் இயக்கி முடித்துள்ள படத்தை வெளியிட்ட பின்னரே அடுத்த படத்திற்கான வேலையில் இறங்குவார். ஆனால் இப்போது அப்படத்தின் ரிலிஸ்க்கு முன்பே இறங்கிவிட்டார்.

இது லைகா நிறுவனத்தினால் ஏற்பட்டது என்றாலும் சிம்புவின் வற்புறுத்தலும் இதற்கு காரணமா என தெரியவில்லை. அல்லது, இனிமே இப்படிதானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.