Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்படம் 2 தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்! படம் ரிலீசாகுமா?

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2 நாளை வெளியாகிறது. காலை 5 மணிக்கே காட்சிகள் துவங்கவுள்ள நிலையில் இன்று தயாரிப்பளாருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் படத்தின் ரிலீசுக்காக முறையாக அனுமதி பெறவில்லை என கூறி தற்போது ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தயாரிப்பாளர் சசிகாந்த் விளக்கம் தர வேண்டும். இல்லை என்றால் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

அதனால் நாளை திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.