Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது இருந்தால் தான் ஜெயிக்க முடியும்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த மாஸ் பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் இமயமலை பகுதியான டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்டது.

முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து ரஜினி நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட ஷூட்டிங் மதுரையில் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசவுள்ளாராம். அவர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது உழைப்பு முயற்சியால் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். நல்ல எண்ணம் இருந்தால் வெற்றி கிடைக்கும் என அவர் கூறினார்.