Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்று நாட்களில் ஐந்து மெகா ஹீரோக்கள் பட பூஜை

மெகா குடும்பத்தில் பல ஹீரோக்கள் சினிமாவில் வளர்ந்து வருகிறார்கள். அண்மையில் மெகா குடும்பத்தில் தொடர்ந்து விஷேசங்கள் நடந்து வருகிறது.

கடந்த 27ம் தேதி எஸ்.ஜே. சூர்யா, பவன் கல்யாண் இணையும் படத்தின் பூஜை மிகவும் சிம்பிளான முறையில் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து, 28ம் தேதி வருண் தேஜா நடிப்பில் ஸ்ரீனு வைட்லா இயக்கும் படத்தின் பூஜையும், அல்லு சிரிஷ் நடிப்பில் MVN ரெட்டி இயக்கும் படத்தின் பூஜையும் போடப்பட்டது.

இந்நிலையில் மெகா குடும்ப ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜை பவன் கல்யாணை தவிர, மெகா குடும்பங்கள் முன்னிலையில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. ஏப்ரல் 29ம் தேதி நடத்தப்பட்ட இப்பூஜையில் ராம் சரணின் கோணிடலா புரொடக்ஷன் லோகோவும் வெளியிடப்பட்டது.

விஜய்-60 படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் இவர் தான்?