Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்

பம்பாய் படம் என்றதும் உடனே நினைவிற்கு வருவது இயக்குனர் மணிரத்னம் சிறந்த படைப்பு. மதங்களை கடந்த காதல், ஹிந்து பையன் சேகராக அரவிந்த் சாமி, இஸ்லாமியப் பெண் பானுவாக மனிஷா கொய்ராலா.

எதிர்ப்புகளை கடந்து கடலோடு கலந்த இவர்களது காதல் என அவ்வளவு அழகாக கதையை நகர்த்தியிருப்பார் மணிரத்னம்.

காட்சிகள் மிக தத்ரூபமாக படம் பிடித்திருப்பார் ராஜிவ் மேனன். பாடல்கள் சொல்லவே வேண்டாம் ஏ.ஆர் ஜி அரபிக்கடலோரம் அழகை கண்டேனே என இசையால் மயங்கவைத்திருப்பார்.

22 வருடங்களை கடந்த இப்படத்தில் மனிஷா நடிக்க மறுத்தாராம். மணி ரத்னம் பற்றி கேள்விப்பட்ட பிறகு தான் ஓகே சொன்னாராம்.

அதே போல படத்திற்கு ஹிரோவாக நடிக்க விக்ரமை தான் கேட்டார்களாம். அவருடைய கால்ஷீட் கிடைக்காததால் அரவிந்த் சாமியை கமிட்செய்தார்களாம்.