Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னத்தின் ஒரே ஒரு தமிழ் படத்துடன் ராம் கோபால் வர்மா ஓடிய கதை தெரியுமா?

மணிரத்னம் இந்தியாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். இவர் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளிவந்த படம் திருடா திருடா.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, படம் மட்டும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை.

இந்த படத்தின் தோல்விக்கு ஒரே ஒரு பாடல் தான் காரணம் என மணிரத்னம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

ராசாத்தீ பாடல் படத்தில் தேவையே இல்லை, வீம்புக்கு என்று வைத்ததால் தான் படத்தின் தன்மையே மாறியது என குறிப்பிட்டுள்ளார்.

சரி..அது இருக்கட்டும், இந்த படத்தில் ராம் கோபால் வர்மா எங்கு வந்தார்? என்று கேட்கிறீர்களா, திருடா திருடா படத்தின் கதை, திரைக்கதையில் பணியாற்றியவர் இவர் தான்.

ராம் கோபால் வர்மா தமிழில் பணியாற்றிய ஒரே படம் திருடா திருடா தான், இப்படத்தின் தோல்வி பயமோ தெரியவில்லை, ராம் கோபால் வர்மா தமிழில் இதுவரை எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை.

Comments