Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ், சௌந்தர்யாவை நல்லவர்கள் என்று நினைத்தேன், ஆனால்?- நடிகை கஜோல் ஓபன் டாக்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் என பல நடிகர்கள் நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி 2. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை ஒரு நிகழ்ச்சி மூலம் வெளியாகி இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை கஜோல் பேசும்போது, தமிழில் பேச வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கமிட்டாக முதலில் பயந்தேன். ஆனால் சௌந்தர்யா, தனுஷ் இருவரும் படத்தில் அதிக வசனம் இல்லை என்று கூறியதால் சரி என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்லவர்கள் என்று நினைத்தால் என்னை ஏமாற்றிவிட்டார்கள், படப்பிடிப்பின் முதல் நாள் 2 பக்கத்திற்கு வசனங்கள் கொடுத்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், என்னுடைய பயத்தை தாண்டி நடிக்க வைத்தார்கள். இப்படக்குழுவுடன் பணிபுரிந்தது மிகவும் அருமையான தருணங்கள் என்று கூறியுள்ளார்.

விவேகம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments