Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBossல் ஜல்லிக்கட்டு போராளி ஜுலியை வறுத்தெடுத்த இரண்டு பிரபலங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பரபரப்பாக ஓடும் ஒரு நிகழ்ச்சி BiggBoss. ஒவ்வொரு நாளும் இதில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அரசியல் பிரச்சனை எழும்பியுள்ளது. காயத்ரி ரகுராம், ஆர்த்தி இருவரும் வெவ்வேறு கட்சியின் ஆதரவாளர்கள். இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மூன்று தலைவர்களை தாக்கி கோஷம் போட்டது ஏன் என்று ஜுலியை மாத்தி மாத்தி கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டுக்கு போராடியது போன்று ஏன் விவசாயிகளுக்கு போராடவில்லை என்றும் கேட்டுள்ளனர். ஆனால், ஜுலி கொஞ்சமும் அசராமல் ‘அவர்களை திட்டியதால் தானே ஜல்லிக்கட்டிற்கு தடை நீக்கப்பட்டது, அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசவில்லை என்றால், இப்படி தான் பேச வேண்டிவரும்’ என கூறினார்.

அதற்கு ஆர்த்தி ‘அது எப்படி தற்போது பிக்பாஸில் ஏதும் பிரச்சனை என்றால் பிக்பாஸை திட்டுவீர்களா?’ என கேட்க, அதற்கு ஜுலி ‘அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்’ என்பது போல் பதில் அளித்தார்.

காய்த்ரிக்கும், ஆர்த்திக்கும் ஜுலியின் மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு சில கோபங்கள் இருந்து வருவது நாளுக்கு நாள் நன்றாக தெரிகின்றது.

இணையத்தில் பிரபலமானவை

Comments