Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீனா படத்தின் கதையே இது இல்லை- பல நாள் ரகசியத்தை கூறிய முருகதாஸ்

முருகதாஸ் படம் என்றாலே திரையரங்குகளுக்கு நம்பி போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஸ்பைடர்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தீனா படம் உருவாகிய விதம் குறித்து முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘முதலில் தீனா படம் ஒரு மாஸ் படமாக இல்லாமல், கிளாஸ் படமாக தான் எடுக்க நினைத்தேன்.

அதில் கிளைமேக்ஸில் ஹீரோயின் இறப்பது போல தான் காட்சிகள் வைத்தேன், கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் வலி என்ற கான்செப்ட்டில் உருவாக்கினேன்.

ஒரு ரவுடி கத்தியால் குத்துப்பட்டு இறக்காமல் அவனை சுற்றி இருப்பவர்களோ, அவனுக்கு பிடித்தவர்களோ இறந்தால் எப்படியிருக்கும் அவன் மனது என்பதை தான் கதையாக உருவாக்கியிருந்தேன்.

ஆனால், ஒரு சில வர்த்தகத்திற்காக கதையை மாற்றி தீனாவை மாஸ் படமாக எடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.

Comments