Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் காலடி எடுத்து வைக்கும் பிரமாண்ட யு-டியூப் சேனல்

வெள்ளித்திரை, சின்னத்திரையை விட தற்போதெல்லாம் டிஜிட்டல் திரை தான் கலக்குகின்றது. இளைஞர்கள் தங்கள் திறமையை எளிதில் வெளிப்படுத்த இந்த டிஜிட்டல் தளம் பயன்படுகின்றது.

பலரும் யு-டியூப் சேனல் ஆரம்பித்து கலக்க, இதிலிருந்து வெள்ளித்திரை வந்து வெற்றிப்பெற்றவர்களையும் நாம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் வட இந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் யு-டியூப் சேனல் TVF Pitchers. இவர்கள் பல வெப் சீரியஸ் உருவாக்கியுள்ளனர்.

இவர்கள் முதன் முறையாக தற்போது தமிழில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர், தமிழில் TVF Machi என்ற பெயரில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

இதில் பல வெப் சீரியஸ் உருவாக்க, திறமையான இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார்களாம், வரும் நாட்களில் தெலுங்கு, மலையாளத்திலும் இந்த சேனல் தொடங்கவுள்ளனர்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments