Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுவனை பரோட்டா போட வைத்த பாலா, நின்று போன படம்- சுவாரசிய தகவல்

பாலா தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களாக எடுப்பவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த தாரை தப்பட்டை வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் மிகவும் பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் பாலா அடுத்து சாட்டை படத்தில் நடித்த யுவனை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தார், அப்படத்திற்காக போட்டோஷுட் கூட நடந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் அப்படம் தள்ளி சென்றது, மேலும், அப்படத்தில் யுவன் பரோட்டா போடுபவராக நடிக்க, அதற்காக நாகூர் அனுப்பி ட்ரெயினிங் கொடுத்தாராம்.

யுவனும் 4 நாட்களில் அதை கற்றுக்கொண்டாராம், அந்த படம் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கிற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

Comments