Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோதல், சமாதானப்படுத்திய சந்தானம்

சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா தான் நேற்றைய ஹாட் டாபிக். ஏனெனில் சிம்பு இப்படத்திற்கு இசையமைக்க, அதை தனுஷ் வெளியிட என பல விளம்பரங்கள் காணப்பட்டது.

அதைவிட சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு பேசப்போகின்றார் என்பது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், இந்த நிலையில் நேற்று சிம்பு ரசிகர்களே அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர்.

அப்போது ஒரு கட்டத்தில் சிம்பு ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட கொஞ்சம் பதட்டம் நிலவியது, அதை தொடர்ந்து கைகலப்பு வரை சென்றது.

உடனே சந்தானம் மைக் பிடித்து இங்கு ரசிகர்கள் மோதல் வேண்டாம், எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம், நீங்களும் அப்படியே இருங்கள் என்று கூறி சமதானப்படுத்தினார்.