Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவால் நஷ்டத்திற்கு ஆளான தயாரிப்பாளருக்கு விஷால் அதிரடி செயல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான AAA படம் வெளியான பிறகு எவ்வளவு பிரச்சனை நடந்தது என்பது நமக்கே தெரியும். சிம்புவால் தான் கடும் நஷ்டத்திற்கு ஆளானதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜீவா நடித்திருக்கும் கீ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் பேசும்போது, AAA படம் குறித்த குற்றச்சாட்டுக்கு சிம்பு இதுவரை பதில் அளிக்கவில்லை.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்காக சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்து தர நான் தயார். படப்பிடிப்பு, பிசினஸ் என அனைத்தும் முடிந்த பின்னர் அவரே எனது சம்பளத்தை கொடுக்கும் தொகையை பெற்று கொள்வேன் என்று கூறியுள்ளார்.

அதோடு கீ திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாவதால் என்னுடைய இரும்புத்திரை படத்தை அதே தேதியில் வெளியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

Comments