Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தை பாராட்டிய விஜய், இது தான் தளபதி மனசு

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு வரும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்த நிலையில் அஜித், விஜய் இருவருமே நல்ல நண்பர்கள் என்றாலும் அவர்களுடைய ரசிகர்களுக்குள் எப்போது ஒரு வகை போட்டி இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால், இவர்கள் படங்கள் ஒரே நாளில் வந்தால் அவ்வளவு தான், திரையரங்கமே அதிர்ந்து விடும்.

கடைசியாக இவர்கள் நடிப்பில் ஒரே நாளில் வந்த படம் என்றால் வீரம், ஜில்லா தான், இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றது.

அப்போது ஜில்லா படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய், அஜித்தின் வீரம் படமும் நன்றாக இருக்கின்றது என கேள்விபட்டேன், அவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியது செம்ம ட்ரெண்ட் ஆகியது அந்த சமயத்தில்.

மேலும், அஜித், விஜய் படங்களில் மோதல் இருந்தாலும், அதை மறந்து விஜய் இப்படி பேசியது அவரின் பெருந்தன்மை தான் என ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Comments