Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கெத்து காட்டிய சிஎஸ்கே பேன்ஸ், சினிமாவை வெறுத்து ஒதுக்கிய ரசிகர்கள்- இப்படி செய்து விட்டார்களே!

தமிழ் மக்களையும் சினிமாவையும் என்றுமே பிரிக்க முடியாது. அப்படித்தான் பல வருடங்களாக இருந்து வந்தது.

ஆனால், சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று சினிமா ரசிகர்கள் அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல போராட்டம் நடக்க, அதில் ஒரு குழுவினர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, இப்படி ஒரு எதிர்ப்பு எந்த ஒரு தீர்வையும் தராது, சரி தற்போது ஐபிஎல் மேட்ச் வேறு மாநிலத்திற்கு மாற்றிவிட்டார்கள்.

தற்போது எங்க போனார்கள் எதிர்ப்பாளர்கள்? என்று கேள்வி கேட்டு வருகின்றனர், அதே நேரத்தில் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் பல சினிமா கலைஞர்களும் கலந்துக்கொண்டனர்.

இதை பார்த்த மக்கள் அனைவரும் இனி நாங்கள் காவேரி தமிழகத்திற்கு வரும் வரை சினிமாவே பார்க்க மாட்டோம், #NoCauveryNoCinema, #BoycottTamilCinema என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

இது சினிமா பிரபலங்களுக்கிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது, இதற்கு உதயநிதி அவர்களும் தன் ஆதரவை தந்துள்ளார்.

அதே நேரத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் ஒரு பக்கம் சிறப்பு இரயிலில் 1000 பேருக்கு மேல் பூனே சென்று சிஎஸ்கே மேட்ச் பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments