Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் விருது விழா, தொடங்கியதுமே வெடித்த சர்ச்சை, ரசிகர்கள் கோபம்

விஜய் விருது விழா பிரமாண்டமாக நடந்து வர, கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழா நடக்கவில்லை. இதை தொடர்ந்து இந்த வருடம் மீண்டும் விஜய் அவார்ட்ஸ் தொடங்கவுள்ளது.

இதற்கான நாமினி லிஸ்ட் கூட வெளியிட்டுள்ளனர், இதற்கு ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்களித்து வருகின்றனர்.

அப்படி ஒரு புறம் இந்த விருது விழா பரபரப்பாக தொடங்கினாலும், வழக்கம் போல் பல சர்ச்சைகள் உலா வர தொடங்கிவிட்டது.

பேவரட் பாடல் லிஸ்டில் தரமணி பாடல்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை, ராம் இதற்கு முன் மேடையிலேயே விஜய் விருது விழாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதனால், யுவன் ரசிகர்கள் கோபமாக தங்கள் கருத்தை கூறி வருகின்றனர், அதே நேரத்தில் பேவரட் இயக்குனர் பிரிவில் இயக்குனர் சிவாவை நாமினி செய்துள்ளனர்.

ஆனால், கடந்த வருடம் இவர் இயக்கிய விவேகம் படம் தோல்வியை தான் சந்தித்தது, ஆனால், இவரை பேவரட் இயக்குனர் பிரிவில் தேர்ந்தெடுத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.