Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், அட்லீ செய்த மாற்றம்

அட்லீ இயக்குனராக அறிமுகமான படம் தான் ராஜா ராணி. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமில்லாமல் ஆர்யா திரைப்பயணத்திலேயே அதிக வசூலை கொடுத்த படம் என்றால் ராஜா ராணி தான்.

இப்படத்தில் முதன் முதலாக ஜெய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருந்ததாம், அட்லீ உனக்கு சூப்பர் கதாபாத்திரம் இதில் தருகின்றேன் என்றாராம்.

பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை சிவகார்த்திகேயன் சந்தானம் கதாபாத்திரத்திற்கு மாற்றினாராம்.

அதை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தை விட்டு சிவகார்த்திகேயனை அட்லீ நீக்கிவிட, இதை ஒரு மேடையில் செம்ம காமெடியாக சிவகார்த்திகேயனே கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.