Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா படப்பிடிப்பில் நடந்த மிகப்பெரும் விபத்து, அஜித் இறங்கி திட்டிய சம்பவம்

அஜித் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித்தின் நெகட்டிவ் கதாபாத்திரம் செம்ம ரீச் ஆனது.

இதில் ஒரு சண்டைக்காட்சியில் அஜித் தன் காரை பின்னாடியே ஓட்டி வருவது போல் இருக்கும், அவரை அரவிந்த் ஆகாஷ் ஒரு காரில் துரத்தி வருவார்.

அப்போது அஜித் தனக்கு பின்னால் ஒரு கார் வருவதை அறிந்து ப்ரேக் போட, அரவிந்த் ஆகாஷும் என்ன செய்வது என்று தெரியாமல் ப்ரேக் போட்டாராம்.

அந்த நேரத்தில் பின்னாடி இருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்கள் தடுமாறினார்களாம்.

உடனே எல்லோரும் அரவிந்தை திட்ட, அஜித் காரை விட்டு இறங்கியதும், தனக்கு பின்னால் வந்து காரில் இருந்தவர்களை தான் திட்டினாராம்.

கவனமாக வண்டி ஓட்டுங்கள் படப்பிடிப்பு என்றாலும் கவனம் தேவை என்று அன்பாக அதட்டினாராம்.

மேலும், அரவிந்த் மேல் எந்த தவறும் இல்லை, அவன் ப்ரேக் போடவில்லை என்றால் என் வண்டியில் மோதியிருப்பார் என்று கூறியதாக அரவிந்த் ஆகாஷே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.