Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக பலியான இளைஞர் இந்த பிரபல நடிகரின் ரசிகராம்! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை காவல் துறை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 10 க்கும் அதிகமானோர் நேற்று பலியாகினார்.

இதனால் உறவுகளை இழந்தவர் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு இளைஞர் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவரின் பெயர் காளியப்பன். இவர் தூத்துக்குடி தனுஷ் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவராம்.

இதனால் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதோடு அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.