Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று நடக்கவிருக்கும் விஜய் அவார்ட்ஸின் சிறப்பு அம்சங்கள் என்ன, சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

விஜய் அவார்ட்ஸ் 10வது வருடம் பிரமாண்டமாக காலடி எடுத்து வைக்கின்றது. இந்த விருது விழா கடந்த இரண்டு வருடங்களாக நடக்கவில்லை.

தற்போது மீண்டும் இந்த வருடத்திலிருந்து இந்த விருது விழா தொடங்கியுள்ளது, இன்று மாலை நடக்கவிருக்கும் இந்த விருது விழாவில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாம்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடனம் ஆரம்பித்து பல முன்னணி நடிகைகளின் நடனமும் இதில் இடம்பெறவிருக்கின்றதாம்.

அதோடு நடிகர் விஜய் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளார், மேலும், காஜல், ஏ.ஆர்.ரகுமான், அட்லீ என பல நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ள நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி ஷாருக்கான் சர்ப்ரைஸாக வந்தது போல், இந்த வருடம் கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸ் கெஸ்ட் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த நிகழ்ச்சியை கோபிநாத், டிடி தொகுத்து வழங்க, இடையில் மா.கா.பா. ஆனந்தும் தொகுத்து வழங்கவுள்ளாராம்.

இந்த வருடம் சிவாஜி விருது யாருக்கு என்பது தற்போது வரை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர்.