Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படிக்காதவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா, மிஸ் ஆயிடுச்சே- ரசிகர்கள் வருத்தம்

தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் படிக்காதவன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விவேக்கின் காமெடி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, சிரிப்பு சரவெடி தான், இந்த படத்திற்கு பிறகு தனுஷ்-விவேக் கூட்டணியில் பல படங்கள் ஹிட் அடித்தது.

இந்நிலையில் முதலில் விவேக் கதாபாத்திரத்தில் இரண்டு நாட்கள் வடிவேலு நடித்தேவிட்டாராம்.

ஆனால், அவர் இயக்குனரிடம் கொஞ்சம் காட்சி எனக்கு அதிகமாக வைக்க சொல்லி முறையிட, பிறகு அது பிரச்சனையாகி வடிவேலு வெளியேறிவிட்டாராம்.

அதை தொடர்ந்து தான் இப்படத்தில் விவேக் நடித்தார், விவேக் கலக்கினார் என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் எப்படியிருக்கும் என ரசிகர்கள் இன்றும் வருத்தப்பட்டு வருகின்றனர்.