Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த அளவிற்கு நேர்மையாக நடந்தது விஜய் விருது விழா, ரசிகர்களின் பார்வையில்

விஜய் விருது விழா 10 வருடம் பிரமாண்டமாக தொடங்கி நேற்று மாலை நடந்து முடிந்துவிட்டது. எப்போதும் சர்ச்சைகளுடன் முடியும் இந்த விருது விழா நேற்று கொஞ்சம் நேர்மையாகவே நடந்து முடிந்தது.

ஆனால், அதிலும் சர்ச்சை இல்லாமல் எப்படி இருக்க முடியும், ஏனெனில் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்த முடியுமா? அப்படி கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்திய விருதுகள் எவை என்பதை பார்ப்போம்.

முதலில் தனுஷிற்கு எதற்கு எண்டெர்டெயினர் ஆப் தி இயர்? என்பது தான் அனைவரின் கேள்வியும், ஏனெனில் தனுஷ் கடந்த வருடம் நடித்த படமான விஐபி-2 படுதோல்வியடைய எதற்கு விருது? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

அதேபோல் இசை பிரிவில் மேயாதமான், தரமணி போன்ற படங்களுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை, காற்று வெளியிடை கொடுத்தத்திற்கு மெர்சலுக்கே ரகுமானுக்கு கொடுத்திருக்கலாம் என்று ஒரு தரப்பு பேசி வருகின்றனர்.

மேலும், நயன்தாரா பேவரட் நடிகை கொடுத்தீர்கள் சரி, எதற்காக சிறந்த நடிகையும் கொடுக்கவேண்டும், அந்த விருது கண்டிப்பாக தரமணி ஆண்டரியாவிற்கு தான் சென்றிருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதை தொடர்ந்து பேவரட் ஹீரோ நாம் முன்பே கூறியது போல் விஜய்யை நேரில் சந்தித்து கொடுத்தாலும், மேடையில் இதுக்குறித்து கூறியாவது இருக்கலாம், ஏனெனில் விழாவிற்கு வந்ததில் பலரும் விஜய் ரசிகர்கள் தான், அப்படியிருக்க இந்த நிகழ்வு ரசிகர்களை மிகவும் அப்செட் ஆக்கியது.

இதை தவிர்த்து மற்ற அனைத்து விருதுகளும் ஓரளவிற்கு நியாயமாகவே கொடுக்கப்பட்டது, எப்போதும் 3 மணி வரைக்கு போகும் இந்த விருது விழா நேற்று 12.15க்கு எல்லாம் முடியும் நிலை வந்தது, அதற்காகவே பாராட்ட வேண்டும்.